யாழ்.மாவட்டத்தில் 2500 ரூபாய் கொடுப்பனவு
நாடு முழுவதும் கர்ப்பவதி பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மாருக்கும் 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஊடாக யாழ்.மாவட்டத்திலும் மேற்படி கொடுப்பனவு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படவுள்ளது. எனவே கர்பவதி பெண்கள் மற்றும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடைய பாலுாட்டும் தாய்மார் சமுர்தி வங்கி ஊடாக இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும்.