மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி, கேகாலை, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளிக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.