திடீரென திறக்கப்பட்ட வான்கதவுகள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வினாடிக்கு சுமார் 500 கனமீட்டர் அளவுக்கு பெரிய அளவிலான நீரோட்டம் பாய்ந்து வருவதாக நீர்வழித் துறையின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு இயக்குநர் பொறியாளர் எஸ்.பி.சி சுகீஸ்வர தெரிவித்தார்.
இதன் காரணமாக குடா கங்கையை அண்மித்துள்ள புளத்சிங்கல, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் உடனடி வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த 6 மணித்தியாலங்களில் இந்த அபாயம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.