இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களுக்காக ரகசிய இணையத்தளம்
எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கான இரகசியமான மற்றும் அநாமதேய பரிசோதனையை இலவசமாகப் பெறுவதற்காக சுகாதார அமைச்சினால் know4sure.lk எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் இலங்கை தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டத்தின் பிரகாரம் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் எய்ட்ஸ் நோய்க்கான இலவச சுய பரிசோதனையை எளிதாக்குகிறது. மேலும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும், ரகசியத்தன்மையும் பாதுகாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
தொலைபேசி மூலம் மருத்துவரை அணுகவும் இணையதளத்தைப் பயன்படுத்தலாம். சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாக தேசிய STD மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எச்.ஐ.வி. எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகம் ஏற்பட்டாலும் இந்த இணையத்தளத்தின் ஊடாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு இலங்கை தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.