Day: October 25, 2022

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்புஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 செப்டெம்பர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 5.75% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,093.98 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதில் ஆடை ஏற்றுமதி [...]

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் – சிறுவன் படுகாயம்யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் – சிறுவன் படுகாயம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இந் நிலையில் படுகாயமடைந்த யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவத்தில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) [...]

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு எஸ்.டி. கொடிகார [...]

ஆற்றில் மிதந்து வந்த ஆணின் சடலம்ஆற்றில் மிதந்து வந்த ஆணின் சடலம்

பொகவந்தலாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகருக்கு அருகாமையில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த ஆணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதனை கண்டு நபர் ஒருவர் பொலிஸாருக்கு [...]

பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லீம் கட்சிகள் மௌனம்பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லீம் கட்சிகள் மௌனம்

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் உள்ள நீதிக்கான மய்யத்தின் தலைமையகத்தில் [...]

பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறைபாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று( 25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் [...]

20 ரூபாவால் குறையும் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம்20 ரூபாவால் குறையும் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம்

முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றன. முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை முச்சக்கர வண்டிகளுக்கு [...]

சாதனை படைத்த வவுனியா மாணவிகள்சாதனை படைத்த வவுனியா மாணவிகள்

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று வவுனியா மாவட்ட பாடசாலைகள் குத்துச்சண்டை தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2022 கல்வியமைச்சின் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் தேசிய மட்ட [...]

மேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிமேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் எவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 23 ஆம் திகதி உயிரிழக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் [...]

யாழ் வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்புயாழ் வடமராட்சியில் கிணற்றுக்குள் விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் [...]

விபத்தில் சிக்கி கணவரும், கர்ப்பவதி மனைவியும் படுகாயம்விபத்தில் சிக்கி கணவரும், கர்ப்பவதி மனைவியும் படுகாயம்

மோட்டார் சைக்கிள் சொகுசு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பவதி பெண் ஒருவரும் அவருடைய கணவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள கர்பிணி பெண் மேலதி சிகிச்சைக்காக கிளிநொச்;சி மாவட்ட மருத்துவுமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியினை சேர்ந்த 21 அகவை குடும்பஸ்தர் தனது மனைவியான [...]

சீரற்ற காலநிலை காரணமாக 18,219 பேர் பாதிப்புசீரற்ற காலநிலை காரணமாக 18,219 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4,271 குடும்பங்களைச் சேர்ந்த 18,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக 06 உயிரிழப்புகளும், 09 வீடுகள் [...]

இன்று சூரிய கிரகணம் – யார் கவனமாக இருக்க வேண்டும்?இன்று சூரிய கிரகணம் – யார் கவனமாக இருக்க வேண்டும்?

2022ம் ஆண்டின் பகுதி சூரிய கிரகணம் – நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – துலா ரவி – ஐப்பசி மாதம் 08 ஆம் திகதி (25.10.2022) செவ்வாய்க்கிழமை – அமாவாசை திதி – [...]

பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்புபலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில [...]