அமெரிக்காவில் நடந்த அழகிப் போட்டியில் மோதல்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கன் நியூயோர்க் அழகிப் போட்டியின் இடையில் மோதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த அழகிப்போட்டியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் 300க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த போட்டியின் பின்னர் நடந்த விருந்துக்கு பிறகு இருத்தரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த மோதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.