Day: October 23, 2022

பாண் விற்ற 70 பேர் சிக்கினர்பாண் விற்ற 70 பேர் சிக்கினர்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாட்டின் பல இடங்களில் சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்குறிப்பிட்ட விற்பனையாளர்கள் [...]

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மருத்துவமனையில்பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மருத்துவமனையில்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள். இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது. அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான [...]

அமெரிக்காவில் நடந்த அழகிப் போட்டியில் மோதல்அமெரிக்காவில் நடந்த அழகிப் போட்டியில் மோதல்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கன் நியூயோர்க் அழகிப் போட்டியின் இடையில் மோதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த அழகிப்போட்டியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டதுடன் 300க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்கள் [...]

ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட் – 18 பில்லியன் டொலர் முதலீடுஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட் – 18 பில்லியன் டொலர் முதலீடு

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் [...]

பொலிஸார் துப்பாக்கிச்சூடு – இளைஞன் பலிபொலிஸார் துப்பாக்கிச்சூடு – இளைஞன் பலி

நீர்கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (23-10-2022) மாலை இடம்பெற்றுள்ளது. “நீர்கொழும்பு ஆண்டிஅம்பலமவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 22 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு [...]

கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலிகால்வாயில் தவறி விழுந்து ஒருவர் பலி

வஸ்கடுவ, சமகிபுர மகா கால்வாயில் இன்று (23) காலை தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வஸ்கடுவ, நுககொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (22) பெய்த மழையினால் கால்வாயில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், [...]

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரை நிறுத்த திட்டம்நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரை நிறுத்த திட்டம்

பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் இன்று (23) தேசிய அமைப்பில் இணைக்கப்படவுள்ளது. இந்த ஜெனரேட்டரின் பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன [...]

குறைந்த நிறை கொண்ட பாண் – மக்களுக்கு முக்கிய அறிவிப்புகுறைந்த நிறை கொண்ட பாண் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 011 2182250 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப்பாளர் [...]

தீபாவளியை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்புதீபாவளியை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு

இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் நான்கு கைதிகள், [...]

யாழ் சாவகச்சேரியில் காஸ் அடுப்பு வெடிப்புயாழ் சாவகச்சேரியில் காஸ் அடுப்பு வெடிப்பு

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. [...]

கொரோனா தொடர்பில் மீண்டும் எச்சரிக்கைகொரோனா தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், [...]

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழப்புவிபத்தில் சிக்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நேற்று (22) பிற்பகல் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம்முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக் கொண்டு [...]

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் படுகாயம்பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இருவர் படுகாயம்

இன்று (22) பிற்பகல் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அரச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பண்டாரகம ஹொரண வீதியில் ரைகம மில்லகஸ் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பேருந்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த [...]

23 வயது யுவதியை கழுத்தறுத்து கொன்ற காதலன்23 வயது யுவதியை கழுத்தறுத்து கொன்ற காதலன்

காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. விஷ்ணுபிரியா (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த [...]

முதியவருக்கு உதவி செய்ய சென்றிருந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்புமுதியவருக்கு உதவி செய்ய சென்றிருந்தவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

அயல் வீட்டிலிருந்த முதியவருக்கு உதவி செய்ய சென்றிருநத நபர் மீது மதில் இடிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் கொழும்பு – கிராண்ட்பாஸ் பகதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தனது வீட்டின் அயல் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில்சிலஇடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் [...]