வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு கிராண்ட்பாஸ் செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.