23 வயது யுவதியை காரில் கடத்திய இருவர் கைது

மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக நேற்றிரவு (12) கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட யுவதி தன்னஹேன யக்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டு சினவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Related Post

சூரிய சக்தி மூலம் மின்சாரம் – ஜூன் 01 ஆம் திகதி முதல் ஆரம்பம்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று தற்போது [...]

யாழில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை
யாழ்ப்பாணம் புங்கங்குளம் ரயில் கடவையில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை [...]

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அழைப்பு
தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி [...]