மின் கட்டணம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு


2022 ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு யூனிட்டுக்கான மின்சாரக் கட்டணம் 32 ரூபாவாக ஆக இருக்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு குறித்த மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்..

180க்கும் மேற்பட்ட மின் அலகுகளைப் பயன்படுத்துபவர்கள் பொது நோக்கப் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தற்போது 550 % ஆக அதிகரித்துள்ள அறவிடுதல் முறையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, உயர்த்தப்பட்ட மின் கட்டணம் விரைவில் குறைவடையும். மத மற்றும் தொண்டு நிறுவனங்களும் தங்கள் மின்சாரப் பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.”

“ஒகஸ்ட் 10-ம் திகதி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியபோது, ​​முன்பு 1.75 ரூபாயாக இருந்த மின் அலகின் விலை 75 ரூபாயாக உயர்ந்தது. இலங்கையில் இது போன்ற சுமார் 48,000 மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன.”

“பொது நோக்கத்திற்கு 32 ரூபாய் அறவிடுகின்றோம். ஒகஸ்ட் முதல் பொது நோக்கத்தின் கீழ் இந்த நிறுவனங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, ​​அதிகரித்து வரும் மின் கண்டனம் குறைவடையும்.”

மேலும், அதிகரித்துள்ள கட்டணத்தை குறைக்கும் வகையில், மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சார சபைக்கு தெரிவித்துள்ளோம்.

“90 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 30 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் அறவிடப்படுகிறது. எங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 32 ரூபாய் செலவாகிறது.

மேலும் 60 யூனிட்டுகளுக்கு குறைவாக இருந்தால் ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் அறவிடப்படுகிறது.

90 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 16 ரூபாய் அறவிடப்படுகிறது.

“அதாவது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தேவையான மானியத்தை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *