யாழில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போதை அடிமை

போதையில் அண்ணியுடன் தகாதமுறையில் நடக்க முயற்சித்த இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்து வந்ததுடன்,
பெண்களை தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியும் வந்துள்ளார். குறித்த இளைஞனின் போதை அட்டகாசங்கள் அதிகரித்து வந்த நிலையில்,
தனது அண்ணனின் வீட்டுக்கு சென்று அண்ணன் இல்லாத நிலையில் அண்ணியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இளைஞனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த அண்ணி அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
அவரை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

தப்பியோடிய 09 கைதிகளில் 06 பேர் கைது
பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் [...]

பாடசாலையின் மீது விமானத் தாக்குதல் – 60 பேர் மரணம்
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய [...]

ஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவு
கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு [...]