8 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், சதொச விற்பனை வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் 8 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை நாடு, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, நெத்திலி, வெள்ளைப்பூண்டு மற்றும் கோதுமை மா என்பனவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, சதொச நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 185 ரூபா, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோகிராம் 194 ரூபா, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 429 ரூபா, வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 279 ரூபா, நெத்தலி ஒரு கிலோகிராம் 1350 ரூபா ஆகவும், விற்பனை செய்யப்படுவதாக சதொச நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related Post

காசா மருத் துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்
காசா வீதிகளில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி [...]

குடித்துவிட்டு வந்த மணமகன் – மணமகளுக்கு வேறொருவருடன் திருமணம்
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22ந்தேதி திருமணம் [...]

வவுனியாவில் இளம் பெண் மரணத்தில் தொடரும் மர்மம்
வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அழகிய பெண்ணொருவரின் சடலம் [...]