ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை – ஆனால் வெவ்வேறு தந்தை


ஒரே நாளில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தைகள் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சியில் நம்பித்தான் ஆக வேண்டும்.

பிரேசிலை சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தில் குதூகலமாக இருந்த பெண்ணுக்கு கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது அந்த தகவல். மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளின் டிஎன்ஏவும் வெவ்வேறாக இருந்தது.

இது, அந்த பெண்ணை மட்டுமல்ல மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆச்சரியத்தை அதிகரிக்கும் வகையில், இரண்டு வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்பட்டு ஒரே பிரசவத்தில் பிறந்தாலும் குழந்தைகள் மிகவும் ஒத்ததாக இருந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் ஒரே நாளில் இரண்டு பேரிடம் செக்ஸ் வைத்துக்கொண்ட விவரத்தை தெரியப்படுத்தினார். அதன் பிறகே இவர் கருவுற்றுள்ளார்.

அதில் ஒரு நபர் பெண்ணுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார். உடனே அந்த நபரின் டிஎன்ஏவை பரிசோத்தபோது ஒரு குழந்தைக்கு மட்டும் நெகட்டிவ் என வந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆண் நண்பரை வரவழைத்து அவரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, இரண்டாவது குழந்தையின் டிஎன்ஏ ஒத்துப்போனது. அப்போதுதான் மர்மம் விலகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *