எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதியை பாதிக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்நிய செலாவணி நெருக்கடி ஓரளவு

தணிக்கப்பட்டவுடன் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் நாளாந்த எரிபொருள் நுகர்வு 3000 லீட்டர்கள் என தரவு பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

இதில் 10% லங்கா ஐஓசி நிறுவனத்தினாலும், மீதமுள்ள 90% இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தாலும் (CPC) வழங்கப்படுகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தி குறித்து மேலம் பல தகவல்களையும், இன்றைய தினம் வெளியான முக்கிய செய்திகளின் விபரங்களையும் உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் விசேட தொகுப்பு,