போராட்டத்தை கைவிடப்போவதில்லை – முச்சக்கரவண்டி சாரதிகள்

தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் எரிசக்தி அமைச்சு இதுவரையில் எரிபொருள் ஒதுக்கீட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதில், [...]

இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்
தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் [...]

கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – அதிர்ச்சியில் சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் [...]