கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இதேவேளை, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், சமர்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகளுக்கு அமைய பரிசீலனை செய்து அதற்கான தீர்மானங்கள், எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related Post

O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் [...]

2,500 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கு வெற்றிடம்
ஆங்கில மொழிக்கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் [...]

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை ஆரம்பம்
அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதாக [...]