உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணம் முதல்நிலை பெற்றுள்ளதுடன், வடக்கு மாகாணம் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கான 2021 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகின. அதில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறத்தக்க வகையில் மாணவர்கள் சித்தியடைந்த வீதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 9 மாகாணங்களில் கிழக்கு மாணத்தில் 66 வீத மாணவர்கள் சித்தி பெற்று முதலாம் இடத்தினையும், ஊவா மாகாணத்தில் 65.86 வீதமான மாணவர்கள் சித்தி பெற்று இரண்டாம் இடத்தினையும், வடமாகாணத்தில் 65.26 வீதமான மாணவர்கள் சித்தி பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.

மேலும் வடமேல் மாகாணம் 64.07 வீதம், மத்திய மாகாணம் 63.84 வீதம், மேல் மாகாணம் 63.31 வீதம், சப்பிரகமுவ மாகாணம் 62.84 வீதம், தென்மாகாணம் 62.11 வீதம், வட மத்திய மாகாணம் 60.10 வீதத்தையும் முறையே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.