அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்த எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
இதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Related Post

2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் [...]

அடுத்த 2 நாட்களில் மழை நிலைமை குறைவடையும்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 [...]

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை
மழை நிலைமை : மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக [...]