பல நிபந்தனைகளுடன் கூடிய விசேட வர்த்தமானி


அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பான பல நிபந்தனைகளை விதித்து நுகர்வோர் அதிகாரசபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளரினால் கோரப்பட்ட தயாரிப்பை ஒரு நியாயமான காலத்திற்குள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூலப்பொருட்களின் சிக்கல் அல்லது பிற நியாயமான உற்பத்தி சிக்கல்கள் இல்லாவிட்டால், பொருட்களின் உற்பத்தியாளர்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை பராமரிக்க வேண்டும்.

அச்சிடப்பட்ட அல்லது இலத்திரனியல் பற்றுச்சீட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், பற்றுச்சீட்டின் பிரதியொன்றை விற்பனையாளரிடம் வைத்திருக்க வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரிசி, கோதுமை மா, முட்டை, பருப்பு, டின் மீன், பால் மா, வெள்ளைப்பூண்டு, கோழி இறைச்சி, பயறு, உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், சீனி, சீமேந்து, மணல், மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள், உரம் போன்ற 48 பொருட்களுக்கு இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *