யாழில் போதைப் பொருள் பாவித்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்கள் கைது

யாழ்.பொம்மைவெளி பகுதியில் பாழடைந்த வீடொன்றுக்குள் இருந்து போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் கைதான பெண்களிடம் இருந்து சுமார் 2 கிராம் போதைப் பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.
பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும்
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன்,
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Post

ஆப்கானில் பயங்கர குண்டுவெடிப்பு – 20 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் [...]

மனைவி வைத்தியசாலையில் – பக்கத்து வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்
திருகோணமலை – நாமல்வத்த பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது [...]

பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து [...]