பையில் அடைத்து வீசப்பட்ட மாணவியின் உடல்
பையில் அடைக்கப்பட்டு வீசப்பட்டு பதினைந்து வயது மாணவியின் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளன. கொலைக்கான காரணம் என்ன?கொலையாளி யார்?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வந்த அந்த 15 வயது சிறுமி காலையில் பள்ளிக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லை. காலையில் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி வீடு திரும்பாத தால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் இல்லாததால் போலீசில் புகார் அளிக்க போலீசில் பல இடங்களில் தேடி வந்த நிலையில், பையில் அடைக்கப்பட்ட சிறுமி உடல் சாலையில் வீசப்பட்டு கிடக்கிறது என்று போலீசுக்கு தகவல் வந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் இருக்கும் வசாய் என்கிற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம் பையில் அடைக்கப்பட்ட பதினைந்து வயது சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிய வர, போலீசார் மும்பை -அகமதாபாத் நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் நைகான் பாலத்தின் அருகே சென்று பார்த்தபோது அந்த மாணவியின் சடலம் காணாமல் போன மாணவியின் உடல் வந்து தெரிய வந்திருக்கிறது.
இந்த மாணவியின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தால் பிரேத பரிசோதனைக்காக வசாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காலையில் பள்ளிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்ற அந்த மாணவி எங்கே சென்றார்? என்ன ஆனது? இடையில் அவர் எங்கே சென்றார்? இல்லை யார் அவரை கடத்தி சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வாழைச்சேனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காணாமல் போன மாணவி உடல் பையில் அடைத்து சாலையில் வீசப்பட்டிருக்கும் சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.