யாழில் பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு


பேருந்தில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் எற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

யாழ்.நகரிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த பேரந்தில் பயணித்த குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது64) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

குறித்த வயொதிப பெண் நேற்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பஸ்ஸுக்குள் மயங்கிச் சரிந்துள்ளார். அதையடுத்து சாரதி சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் ,

அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வயோதிப பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *