யாழ் வல்லையில் பற்றைக்குள் இருந்து முதியவரின் சடலம் மீட்பு
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17 ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போயிருந்தார்.
சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.