முல்லைத்தீவில் காதல் பாடம் எடுத்த ஆசிரியர் – கடுப்பான பெற்றோர்


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தயாலத்தில் மணவர்களுக்கு அடித்து மற்றும் மாணவர்களுக்கு தனது காதல் கதையினை கற்பிக்கும் ஆசிரியர் வேண்டாம் என்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்விகற்றுவந்த ஆசிரியரை இடம்மாற்றியமையினை கண்டித்தும் அந்த இடம்மாற்றத்தினை மீள பெற வலியுறுத்தியும் மாணவர்கள்,பெற்றோர்கள் பாடசாலையினை மூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்காக மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் குறித்த மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரை இடம் மாற்றம் செய்தமையினை கண்டித்து குறித்த ஆசிரியரை மீள பணிக்கு அமர்த்த கோரியும் பெற்றோர்கள் பாடசாலையினை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் ஒருஆசிரியர் இந்த மாணவர்களுக்க தேவை இல்லை என்றும் வலியுறுத்தி வந்துள்ளார்கள் தரம் 9 வரையில் காணப்படும் பாடசாலையில் மாணவர்களுக்கு அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான இந்த ஆசிரியரின் செயற்பாடு மாணவர்களை காதல் திசையில் இழுக்கும் செயற்பாடுஆகா காணப்படுவதாக மாணவர்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்கள்.

து விடையம் குறித்து முல்லை வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என்றும் தேவையான ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்;து அவரை மீண்டும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இன்று 16.08.2022 காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை பாடசாலைக்குள் எவரும் செல்லவிடாது தடுத்து எதிர்பினை வெளிப்படுத்திய நிலையில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார் இதன்போது அடுத்த வாரத்தில் குறித்த ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்களால் பாடசாலை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *