சாரதி தூக்கம் – மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த எரிபொருள் பவுசர்

இன்று (13ம் திகதி) அதிகாலை 2.00 மணியளவில் களனி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேம்பாலத்தின் மீது பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக பாலத்தில் இருந்து கீழுள்ள வீதிக்கு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் இருந்த எரிபொருள் கையிருப்பு வேறு ஒரு பவுசர் வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது பவுசர் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

லொறியின் மீது பேருந்து மோதி விபத்து – குழந்தை பலி
மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் [...]

இலங்கையில் 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உட்பட 51 பேர் படுகொலை
இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் [...]

யாழ் நகர் பகுதியில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [...]