102 வயது வரை மருத்துவ சேவை வழங்கிய கனேடிய மருத்துவர் காலமானார்
கனடாவில் 102 வயது வரையில் மக்களுக்கு சேவை வழங்கிய மருத்துவர் காலமானார்.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சேவையாற்றி வந்த டொக்டர் சார்ள்ஸ் கொட்பீரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது 105ம் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கடந்த ஜுலை மாதம் 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வடஅமெரிக்காவில் மிக நீண்ட வயது வரையில் மருத்துவ சேவை ஆற்றியவர்களில் ஒருவராக கொட்பீரி அடையாளப்படுத்தப்படுகின்றார்.
102 வயது வரையிலும் அவர் சுறுசுறுப்பாக மருத்துவ சேவை வழங்கி வந்தார் என அவரது புதல்வர் மார்க் கொட்பரி தெரிவிக்கின்றார்.
102 வயது வரையில் றொரன்டோவின் சில மருத்துவ சிகிச்சை நிலையங்களில் வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு சேவை வழங்கி வந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
1953ம் ஆண்டு றொரன்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுக்கொண்டார்.
தனது ஓய்வு காலத்திலும் மக்களின் நலனுக்காக அரிய சேவைகளை வழங்கியுள்ளதாக பலர் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.