தைவானின் கடற்பகுதிகளில் ஏவுகணைகளை வீசி சீனா மிரட்டல்
சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் நான்சி பெலோசி தைவான் சென்றதால் தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியுள்ள சீனா, நேற்று தைவானின் கடற்பகுதிக்குள் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.
தைவானை சுற்றிலும் ஆறு இடங்களில் சீனா தனது போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
இதில் ஒரு இடம் தைவான் கடற்கரையில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் தான் அமைந்துள்ளது.
சீனா ஏவிய டாங்பெங் பாலிஸ்டிக் ஏவுகணைகள், தைவானின் வட கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல்பகுதிகளில் வீசப்பட்டதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.