வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமி பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் இன்று (03) வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான புணாணை பொத்தனையைச் சேர்ந்த உசனார் பாத்திமா றீமா என்ற மூன்றரை வயதுடைய சிறுமியே வீட்டின் சுவர் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் வீடு உடைக்கப்பட்டு ஒரு பக்கம் சுவர் மாத்திரம் காணப்பட்ட நிலையில் சீமெந்து கல் சுவர் ஓரத்தில் இருந்து மூன்று சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது காற்று பலமான வீசி வரும் நிலையில் சுவர் தீடிரென சரிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிழந்துள்ளதுடன், மற்றைய இருவரும் தெய்வாதீனமான உயிர் தப்பியுள்ளனர்.
உயிரிழந்த மூன்றரை வயதுடைய சிறுமியின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

தொடர் போராட்டத்தில் களமிறங்கிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமானது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இராஜினாமாவைக் கோரி இன்று முதல் [...]

நியூசிலாந்து நோக்கி சென்ற 248 தமிழர்கள் மாயம்
மீன்பிடி இழுவை படகில் நியூசிலாந்தை அடையும் நோக்கில் காணாமல் போன 248 இலங்கை [...]

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோட்டம் – தீவிர தேடுதல்
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோடியதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு [...]