பேருந்து மோதியதில் வீதியில் பயணித்த பாதசாரி பலி
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.