மேலும் ஒரு அடையாளம் காணப்படாத சடலம் கரையொதுங்கியுள்ளது
கொழும்பு காலி முகத்திடலில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் கொழும்பில் மேலும் ஒரு சடலம் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.