இன்று முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.
Related Post

மதுபானசாலைகள் பூட்டு
கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானசாலைகள் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான அறிவிப்பை கலால் ஆணையாளர் [...]

காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு – சவேந்திர சில்வாவும் விஜயம்
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். [...]

இன்று முதல் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை இன்று (14) முதல் 50 [...]