ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை

ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு B.A.5 தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரிக்கையை விடுத்துள்ளார்
தற்போது தொற்றுநோயின் மிகப்பெரிய கொரோனா அலைகளில் ஒன்று உலகத்தை பாதித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜீவந்தர, இது, நோயெதிர்ப்பு தவிர்க்கும் கொரோனா வைரஸ் விகாரங்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய B.A.5 தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவும் எனவும், குறைந்தபட்சம் மூடிய அறைக்குள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் சந்திம ஜீவந்தர கோரியுள்ளார்.
Related Post

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை, மாமா கைது
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை [...]

யாழில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிரவேலு [...]

பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ் இளைஞன்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக [...]