காதலிப்பதாக கூறி ஆசிரியையிடம் 23 லட்சம் ரூபாய் மோசடி

ஆசிரியை ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி 23 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் 2 பிள்ளைகளின் தந்தையான காப்புறுதி நிறுவன முகாமையாளரை கைது செய்ய விசேட குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது.
32 வயதான குறித்த ஆசிரியை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.கார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கூறி பல சந்தர்ப்பங்களில் 23 லட்சத்து 30,600 ரூபாவை காப்புறுதி நிறுவன முகாமையாளர் குறித்த ஆசிரியையிடம் இருந்து பெற்றுகொண்டுள்ளார்.
ஆசிரியருக்கு தெரிந்தே கடன் அட்டையை பயன்படுத்தி பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இந்நிலையில் தன் காதலன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதை அறிந்த ஆசிரியை சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related Post

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
மினுவாங்கொடை முக்கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவருமான சஞ்சீவ லக்மாலை [...]

யாழில் தங்கை கர்ப்பம் – அண்ணனுக்கு விளக்கமறியல்
யாழில் அண்ணன் தனது தங்கையை கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் [...]

நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்றிரவு நடந்த மோதல்களில் 84 பேர் படுகாயம்
நாடாளுமன்ற சூழல் மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் இடம்பெற்ற [...]