Day: October 28, 2022

மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்புமூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு [...]

துப்பாக்கிச் சூடு – 15 வயது பாடசாலை மாணவர் படுகாயம்துப்பாக்கிச் சூடு – 15 வயது பாடசாலை மாணவர் படுகாயம்

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திஹாகொட பொலிஸ் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் [...]

திருப்பி அனுப்பப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கதிருப்பி அனுப்பப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர், நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெறவுள்ள [...]

OMP என்பது ஒரு இனவெறி அமைப்பு – தமிழர் தாயக சங்கத்தினர் கண்டனம்OMP என்பது ஒரு இனவெறி அமைப்பு – தமிழர் தாயக சங்கத்தினர் கண்டனம்

OMP என்பது ஒரு இனவெறி அமைப்பு என காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரால் இன்று வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை [...]

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தான்பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தான்

தனது மனைவியின் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04-11-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்றைய தினம் (27-10-2022) உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் [...]

தாயாரின் உயிரிழப்பை தொடர்ந்து மகனும் உயிரிழப்புதாயாரின் உயிரிழப்பை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இச் சமபவம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு இவர் தாயாரின் பிரிவால் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்துள்ளமை [...]

அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம்அரிசி ஆலைகள் மூடப்படும் அபாயம்

அரிசி இறக்குமதி நிறுத்தப்படாவிட்டால் நாட்டின் சகல சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரிசிக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி 25 சதத்தால் [...]

திடீரென சேகரிக்கப்படும் முன்னாள் போராளிகளின் விபரம்திடீரென சேகரிக்கப்படும் முன்னாள் போராளிகளின் விபரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் [...]

சக ஆசிரியருடன் நைட் கிளப்பிற்கு சென்ற யுவதி துஸ்பிரயோகம்சக ஆசிரியருடன் நைட் கிளப்பிற்கு சென்ற யுவதி துஸ்பிரயோகம்

நைட் கிளப்பிற்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச்செய்து துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக கருவாகாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாலபே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் இளம் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையை சேர்ந்த இளம் ஆசிரியருடன் சமீபத்தில் இரவு விடுதிக்கு சென்றுள்ளார். [...]

யாழில் போதைப் பொருட்களுடன் 3 மாணவர்கள் கைதுயாழில் போதைப் பொருட்களுடன் 3 மாணவர்கள் கைது

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (27) வியாழக்கிழமை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, [...]

பல தடவைகள் மழைபல தடவைகள் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]