கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவி புதிய சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவியே 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜ சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இந்த சாதனையை படைத்துள்ளார்.
Related Post

நாளை முதல் பாடசாலை ஆரம்பம்
நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் [...]

முதலிடம்பெற்ற மாணவி தனுஸ்கா…
மாதாந்தம் USAகல்வி நிறுவனத்தால் நடாத்தப்படும் விஞ்ஞானத்தேடலில் வினாவிடைப்போட்டியில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவியாக தனுஸ்கா [...]

பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள்
மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண [...]