லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை அடுத்து. எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவினால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

இலங்கையில் பஸ் கட்டணங்கள் 30% அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் [...]

மின் வெட்டு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் [...]

தேசிய நிவாரண திட்டம் – பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்
நாட்டில் பொருளாதார மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, [...]