மின் வெட்டு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 1 மணித்தியால இரவு நேர மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிசம்பர் 15ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 வது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு 1 மணி நேரம் குறைக்கப்படும் என்றும் தெரவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

யாழ் . கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவர் வெட்டி படுகொலை – மனைவி, மாமன் உள்ளிட்ட 11 பேர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் [...]

எகிப்த்தில் கண்டு பிடிக்கப்பட்ட வேற்றுக் கிரக கல்
எகிப்த்து நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட விண் கல் ஒன்று, மிகவும் அரியவகையானது என [...]

நெடுந்தீவு படுகொலை – பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான [...]