ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் பலி
மாத்தறை நகரில் வெள்ளைக் கோட்டின் குறுக்கே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்து எதிர் பாதையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மாத்தறை நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மாத்தறை, திஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.