யாழில் பேருந்திலிருந்து இறங்கிய 21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற இளைஞன் பருத்தித்துறை 1ம் கட்டை சந்தியில் பேருந்திலிருந்து இறங்கிய நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கூட்ட நொிசலுடன் பயணித்த பேருந்தில் 21 வயதான குறித்த இளைஞனும் பயணித்துள்ளார்.
இந்நிலையில் பருத்தித்துறை 1ம் கட்டை சந்தியில் இறங்கிய நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மந்தியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஆனாலும் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.
Related Post

யாழ் பருத்தித்துறை கடலில் மிதந்து வந்த இனந்தெரியாத சடலம்
பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. இன்று அதிகாலையிலிருந்து [...]

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் [...]

மன்னார் நானாட்டான் பிரிவில் இலவச அரிசி பொதி வழங்கி வைப்பு
2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி [...]