அறையில் இருந்த மர்ம நபர் – மனைவியை கொலை செய்த கணவன்

லங்காபுர பிரதேச செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், அறையில் நபர் ஒருவரைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை எனவும் உயிரிழந்த பெண்ணின் கணவன் முன்னர் தெரிவித்திருந்தார்.
யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

யாழில் 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட [...]

ஓடும் பேருந்தில் நடத்துனரை உதைத்த பெண் – தூக்கி வீசப்பட்டு படுகாயம்
நேற்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் [...]

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் [...]