எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞனை கொடூரமாக தாக்கிய இராணுவம்


எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் குறித்த இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.

இராணுவ அதிகாரி பணி என்பது மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு பணியாகும். அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட மனித உரிமை அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ, வாரியபொல, கம்பஹா உட்பட நாடு முழுவதும் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு அந்தந்த இராணுவத் தலைவர்களே நேரடியாகப் பொறுப்பாளிகள் என்பதை இந்த சம்பவம் சுட்டிகாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினரைக் கட்டுப்படுத்து அனுப்பியதன் மூலம் இலங்கை உலகத்தின் முன் மிக மோசமான தேசமாக முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை தற்போது வரையிலும் மனிதாபிமான உதவிகளையே பெற்று வருகிறது. இந்த வரிசையில் நிற்கும் மிகவும் ஏழ்மையான மக்களை பட்டினி மற்றும் சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

எனினும் அரசாங்கப் படைகள் அந்த மிகவும் ஏழை மக்களைத் தாக்கும் போது, ​​ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மாத்திரமின்றி தமிழகத்திலிருந்து உட்பட உதவிகளை நிறுத்த கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இராணுவத்தால் பொலிஸாருக்கு. அரசாங்க அதிகாரிகள் மீது, வெளிநாட்டவர்கள் மீது மற்றும் குடிமக்கள் மீதான தாக்குதல்களுக்கு முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *