கொழும்பு பிராந்தியம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளையும் எதிவரும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவருகின்றன.
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பான விசேட அமைச்சரவை தீர்மானங்களை நேற்றைய தினம் (27-06-2022) அறிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனைத் தெரிவித்துள்ளார்.
பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் மற்ற பகுதிகளிலும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.