சீனாவின் முதாலாவது மிக நவீன விமானம் தாங்கி கப்பல்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சீனா தனது முதலாவது அதி நவீன விமான தாங்கிக் கப்பலை (Aircraft carrier) நேற்றய தினம் உத்தியோகபூர்வமாக பரீட்சார்த்த சோதனைகளுக்கு இட்டுள்ளது. Fujian எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான தாங்கிக் கப்பல் சீனாவின் மூன்றாவது விமான தாங்கிக் கப்பல் ஆகும்.

Shanghai இன் Jiangnan shipyard இல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Fujian, முழு நீள ஓடுபாதை தளத்தை (full-length flight deck) கொண்டமைந்துள்ளது.

சீனாவின் Liaoning மற்றும் Shandong ஆகிய முதல் இரண்டு விமான தாங்கிக் கப்பல்களில் இல்லாத electromagnetic catapult-assisted launch system ஐயும் Fujian கொண்டமைந்ததுள்ளது.

இது அமெரிக்காவின் விமான தாங்கிக்கப்பல்களின் வடிவமைப்புக்கு நிகரானது ஆகும். உலகில் அமெரிக்கா 11 விமான தாங்கிக் கப்பல்களுடன் முன்னிலையில் உள்ளது.

விமான தாங்கிக் கப்பலுக்கு இடப்பட்டுள்ள பெயர் Fujian என்பது சீனாவின் ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலம் சீனா உரிமை கோரும் தாய்வானுக்கு எதிராகவும், மிக அருகிலும் உள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.