பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி விடுமுறை இல்லாமல் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை தொடருவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார்.
இந்நிலையில், பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.