காலி முகத்திடல் மோதல் – 9 பேர் வைத்தியசாலையில்

மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கோட்டா கோ ஹோம் என கோசமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது போராட்டக்காரர்களின் கூடாரங்களை மகிந்த ஆதரவாளர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். இதன் காரணமாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

கூலர் வாகனம் மீது மோதிய ரயில் – சாரதி ஆபத்தான நிலையில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய புகைரதம் கூலர் வாகனம் [...]

இரு பிள்ளைகள் கொலை – தந்தை தற்கொலை
அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு [...]

வவுனியா யுவதி கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்
வவுனியா, நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இளம் யுவதியொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் [...]