திருகோணமலையில் 67 பேர் அதிரடியாக கைது
கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை குழு ஒன்று நிலாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.