யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – வீதியை மறித்த மக்கள்
யாழ்.திருநெல்வேலி – பரமேஸ்வரா சந்தியில் உள்ள பொருள் நிரப்பு நிலையத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு பிரச்சினையை சுமுமாக முடித்துவைத்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
பரமேஸ்வராந்தி சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு சிலின்டர்கள் வந்திறங்கியதாக பொதுமக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை முதல்
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் சமையல் எரிவாயு பெறுவதற்கு ஒன்று கூடி இருந்த நிலையில் சமையல் எரிவாயு வரவில்லை. என பொதுமக்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர் அத்தோடு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் அங்கு கூடியிருந்த பொதுமக்களை
விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது எரிவாயு கொள்கலன் இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை சுகமானது,