வவுனியாவை சேர்ந்த பெண் உட்பட 8 பேர் புத்தளத்தில் கைது

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிசாரால் இன்று (18.05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் வவுனியாவில் இருந்து பேரூந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம், புத்தளம், கருவெலச்செவ பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Post

யாழ். காரைநகரில் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்
யாழ்.காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். பொதுமக்களுக்கு [...]

வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06.10.2022 அன்றைய தினம் வட்டக்கச்சி மாயனூர் [...]

சுமத்திரனின் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக [...]