பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளை (18) மக்களை எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அறிவித்துள்ளது.
மேலும், அவசர தேவையின் நிமித்தம் மாத்திரம் எரிபொருள் நிலையங்களுக்கு வருமாரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
எனினும், மே 19 ஆம் திகதி முதல் வழமை போல் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.