பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது
முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.